eththanai naavaal thuthippen yesu

எத்தனை நாவால் துதிப்பேன் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எத்தனை நாவால் துதிப்பேன் இயேசு
கர்த்தா உன் கருணையை பாடிப் புகழ்ந்து
நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் இனிக்கும்
இன்னிசை மாலையால் போற்றிப் புகழ்ந்து
பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
பேதையின் பலவீனம் பராததருள்போனே
சரண் என்று செம்பாத மலரடி சேர்ந்தோரை
தாவிப் பிடித்து கவலைத் தீர்த்தோனே
நம்பினோர் அல்லார் அறிவார் இயேசு
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
அம்பிரார் உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பூரண சவரட்சனை செல்வம்