ethoo en nenysukkulle – Etho Enthan Nenjukulle Anandha Ragam

ஏதோ என் நெஞ்சுக்குள்ளே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

ஏதோ என் நெஞ்சுக்குள்ளே – Etho Enthan Nenjukulle Anandha Ragam
ஏதோ என் நெஞ்சுக்குள்ளே ஆனந்த ராகம்
ஏதோ என் உயிருக்குள் ஆறுதல் கானம்
என் யேசு எனக்குள்ளே வருகின்ற நேரம்
என் இயேசு என்னுயிரில் கலந்திடும் நேரம்
என் உள்ளம் குளிர்ந்திடுதே -ஏதோ என் நெஞ்சுக்குள்ளே
தனியாய் நான் இன்று தவித்திடும் வேளை
தாயாக வந்தாய்
கரையில்லா ஓடத்தில் கலங்கிடும் நேரம்
கரமாக வந்தாய்
அவரிலே கலந்தேன் அன்பினை சுவைத்தேன்
ஆனந்தமாய் இனி வாழ்வேன் – 2
இனி என் வாழ்வில் வசந்த ராகம்
இனி என் வாழ்வில் ஆனந்த கோலம் -ஏதோ என் நெஞ்சுக்குள்ளே
அபாய வேளையில் அழுதே நின்றேன்
அபயம் தந்தாய்
அனாதையாய் நான் அலைந்தே நின்றேன்
அடைக்கலம் தந்தாய்
உறவினில் கலந்தேன் உயிரினில் இணைந்தேன்
உன் மடியில் தலை செய்வேன் – 2
இனி என் வாழ்வில் இருளே இல்லை
ஒளி மயமாக இனி நான் வாழ்வேன் -ஏதோ என் நெஞ்சுக்குள்ளே