ethanathi thevane – Yeathanaathi Devanae

ஏதனாதி தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஏதனாதி தேவனே – Yeathanaathi Devanae
பல்லவி
ஏதனாதி தேவனே,சிலுவை சுமந்
தெங்கே போகிறீர், என் ஜீவனே?
அனுபல்லவி
ஆதிப் பிதாவின் மைந்தா, அருமைக் கிறிஸ்தானந்தா,
அஞ்சாததம்ஏவை அருந்திய நஞ்சார் கனியாலே விளைந்ததோ
சரணங்கள்
1.முந்து மனுடர் தம்மால் வந்த வினையை மாற்றி,
முழுதும் உலகை ஆற்றி, எழுதும் வேதத்தைச் சாற்றி,
தந்தலகையைத் தாழ்த்தி, மைந்தரைக் கரையேற்றி,
தப்பா துயிர் விடுத்து மெய்ப்பாய் ரட்சிக்கத் தேற்றி,
2.*ஆகம் எல்லாம் புண்ணாக, அடிபட்டிரங்கி நோக,
ஆத்தும வாதைகள் மேவி, வேற்று முகங் குறாவி,
சாகத் தீர்க்கப்பட்டொரு சாலேம் பட்டணம் விட்டு,
தறுகித் தறுகி நின்று, மறுகி மறுகிச் சென்று,
3.மெத்த நின்முகம் வாடி, ரத்த வெள்ளங்கள் ஓடி,
மெலிந்து, முள்முடி சூடி, நலிந்து நடை தள்ளாடி,
சத்துரக்களை நாடி, சித்தம் உருகித் தேடி,
சாவைத் தொடர்ந்து கொல்க தாவுக்கடர்ந்து கூடி,
4.பாவியைக் கை தூக்கவோ? தீவினையை நீக்கவோ?
பரமகதி சேர்க்கவோ? பரனோடுற வாக்கவோ?
மேவித்தற்காக்கவோ? சாவின் துயர் போக்கவோ?
வெற்பனைக் கடாட்சித்தாற்போல் எப்போதும் எனைக் கண்ணோக்கவோ?