ethanai naaval naan ummai

எத்தனை நாவால் நான் உம்மை துதிப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எத்தனை நாவால் நான் உம்மை துதிப்பேன்
இத்தனை நன்மைகள் செய்தவரை
1. காரிருள் சூழ்ந்திடும் வேளையிலும்
எமை கண்மணி போல காத்தவரே
சோதனை நேரத்தில் சோர்ந்திடாதெனையே
சுகம் பெலன் தந்தென்னை காத்தவரே
2. மாசில்லா பொன்னே மா மணியே
மங்காத ஒளியே மா பிரகாசமே
(பரி)சுத்தர்கள் போற்றிடும் சுந்தர வதனமே
நித்தியா நந்தனே நிர்மல ராஜனே
3. நீதிமான் என்றும் களிகூர்ந்து மகிழுவான்
கர்த்தரின் கரங்களிலே அடைக்கலம் புகுவான்
நீதியின் கிரீடத்தை நித்தமும் நீர் அளிப்பீர்
கர்த்தரில் மகிழ்ந்து பாடியே துதிப்பேன்