ethaith thanthalum enrum thanthalum unakku ukanthathu aakumoo?

எதைத் தந்தாலும் என்றும் தந்தாலும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

எதைத் தந்தாலும் என்றும் தந்தாலும் உனக்கு உகந்தது ஆகுமோ?
எனைத் தந்தாலே என்றும் தந்தாலே உனக்கு உரியது ஆகுமே -2
1. நான் நானாக என் குறை நிறையோடு உன் பாதம் வருகின்றேன் -2 என்னையே ஏற்று பலியாய் மாற்று இயேசு பாலகனே எந்தன் வாழ்வினையே-2
2. குடும்பம் முழுவதுமே இன்று நன்றி உணர்வோடு உம்மிடம் வருகின்றோம் -2 எம்மையே ஏற்று பலியாய் மாற்று இயேசு பாலகனே எங்கள் குடும்பத்தையே-2
3. உறவு அனைத்தையுமே எங்கள் சமூகம் முழுவதையும் உம் பாதம் வைக்கின்றோம் -2
அனைத்தும் ஏற்று பலியாய் மாற்று இயேசு பாலகனே எங்கள் சமூகத்தையே-2