ethai izhanthalum

எதை இழந்தாலும் உம்மை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை
யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை-2
உங்க சமுகம் இல்லாத
வாழ்வு வேண்டாம்பா
நீங்க இல்லாம நான் இல்லப்பா-2-எதை
1.வாழ்வு தந்தவர் நீர்தானையா
என்னை வாழ வைப்பதும் நீர்தானையா-2
(என்னை) வாழ வைப்பதும் நீர்தானையா-2
பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை
இயேசுவே உம்மையன்றி
எனக்கு வாழ்வே இல்லை-எதை இழந்தாலும்
2.கரம் பிடித்தவர் நீர்தானையா
என்னை கைவிடாதவர் நீர்தானையா-2
(என்னை) கைவிடாதவர் நீர்தானையா-2 – பிரிவதில்லை
3.உண்மையுள்ளவர் நீர்தானையா
என்னை உருவாக்கியவர் நீர்தானையா-2
(என்னை) உருவாக்கியவர் நீர்தானையா-2 – பிரிவதில்லை