esuvai nee arivaye paratha thesame -2

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஏசுவை நீ அறிவாயே பாரத தேசமே -2
பாவத்தின் பரிகாரியை
லோகத்தின் ரட்சகரை
அவர் அன்றி வேறொரு தெய்வம் பூமியில் இல்லையே
அவர் போல சிலுவையில் மரித்தவர் எவரும் இல்லையே – ஏசுவை
1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
பாரதியும் ஏசுவை அறிந்து
கவியும் பாடினாரே; -2
மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
கண்ணதாசனும் ஏசுவை அறிந்து
காவியம் எழுதினாரே -2
நசரேயன் ஏசுவின் நாட்களில் நான்
அங்கே வாழ்ந்திருந்தால்
அவர் பாதத்தை கண்ணீரால் அல்ல
இதயத்ததின் இரத்தத்தால் கழுவியிருப்பேன் -2
விவேகானந்தரும் ஏசுவை அறிந்து கூறியது -2
2.இயேசு ஊழியம் கொள்ளவராமல்
ஊழியம் செய்திட வந்தாரே
ஐடா ஸ்கடரும் ஏசுவை அறிந்து
தன்னை அர்ப்பணித்தார்-2
இந்திய பெண்ணகளை மாற்றி உயர்த்திட
இயேசுவை தவிர யாரும் இல்லை
ராமாபாயும் ஏசுவை அறிந்து
சொல்லிய வார்த்தை இதே-2
கிறிஸ்து இயேசுவை ஒவ்வொரு நாளும்
மாறுபட்ட வேடத்தில் பார்த்தேன்
ஒவ்வொரு மனிதரில் இயேசுவை பார்த்து
அவருக்கே தொண்டு செய்கிறேன் -2
தெரேசாவும் ஏசுவை அறிந்து கூறியது-2