eralamana koottaththar soozha – Yearakamaana Koottaththaar Soozha

ஏராளமான கூட்டத்தார் சூழ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஏராளமான கூட்டத்தார் சூழ – Yearakamaana Koottaththaar Soozha
1.ஏராளமான கூட்டத்தார் சூழ
ஓர் ஸ்திரீயும் வந்தனள்
பேரன்பர் கிறிஸ்தின் வஸ்திரம் தொட,
ஆரோக்யம் பெற்றனள்.
உன் மீட்பர் வஸ்திரம் நீயும்
இன்றாவலாய்த் தொட்டால்,
ஆரோக்யம் ஜீவன் பெறுவாய்
பேரன்பர் சக்தியால்.
2.அம்மங்கை நாணி அஞ்சி வந்தாலும்
இம்மானுவேல் தொட்டாள்
தன் மீட்பராலுண்டான மா நன்மை
நன்குணர்ந்தே நின்றாள்.
3.பேரன்பர் பார்த்து, ரட்சிப்பைப் பெற்றாய்
நீ அஞ்சாதே என்றார்;
அம்மாது நெஞ்சில் மெய்ச்சமாதானம்
இம்மானுவேல் தந்தார்.