eppiraththa enra pethlakeme

எப்பிராத்த என்ற பெத்லகேமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

எப்பிராத்தா என்ற பெத்லகேமே
யூதேயாவில் நீ சிறியதல்ல
இஸ்ரவேலை ஆளும் ராஜா
உன்னிடமிருந்து புறப்படுவார்
இரட்சகர் வந்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
இரட்சண்ய நாள் இதுவே
ஈசாயின் அடிமரத்தில் துளிர் தோன்றிற்றே
வேரினின்று கிளை ஒன்று எழும்பி செழிக்குமே
கர்த்தரின் ஆவி அவர் மேலிருப்பாரே
ஞானத்தையும் அறிவையும் அவர் அருள்வாரே
அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே
சமாதான பிரபுவே பிறந்திட்டாரே
அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே
சமாதான பிரபுவே பிறந்திட்டாரே
இரட்சகர் வந்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
இரட்சண்ய நாள் இதுவே
நீதிப்படி ஏழைகளை நியாயம் தீர்த்திடும்
நீதியுள்ள தேவன் அவர் வந்து விட்டாரே
நீதியின் செங்கோல் அவர் கையிலிருக்கும்
நித்திய மாட்சி அவர் மேலே இருக்கும்
நித்திய பிதாவே நிமல ரூபனே
நீதியின் மீட்பரே பிறந்திட்டாரே
எப்பிராத்தா என்ற பெத்லகேமே
யூதேயாவில் நீ சிறியதல்ல
இஸ்ரவேலை ஆளும் ராஜா
உன்னிடமிருந்து புறப்படுவார்
இரட்சகர் வந்தாரே
இரட்சிப்பைத் தந்தாரே
இரட்சண்ய நாள் இதுவே