Enthan Yesuvae Unthan Maarbil Naan Lyrics

எந்தன் இயேசுவே உந்தன் மார்பில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் இயேசுவே உந்தன் மார்பில் நான்
நித்தம் சாய்ந்துமே இளைப்பாறுவேன்
என் ஆதி அந்தமும் நீரே
என் ஜீவன் பெலனும் நீரே
என் வாழ்விலும் என் தாழ்விலும்
என் ஆயுள் முழுவதும் நீரே
என் அரணும் கோட்டையும் நீரே
என் பெலனும் துருகமும் நீரே
என் கேடயம் என் பரிசையும்
என் நம்பிக்கையும் நீரே