enthan uyirulla natkalellam

எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்
உம்மையே ஆராதிப்பேன்
நான் வாழ்கின்ற காலமெல்லாம் உம்மை என்றென்றும் கொண்டாடுவேன் -2
அதிசயமே என் ஆதாரமே உமக்கே என் ஆராதனை இயேசய்யா-2 – எந்தன் உயிருள்ள
(1) உந்தன் அன்பாலே நீர் என்னை அணைத்தீரே
அளவில்லா நன்மைகளை நீர் எனக்கு தந்திரே-2
யுகயுகமாய் உம் நாமம் உயர்த்துவேன்
தலைமுறை எல்லாம்
உம் கிருபை பாடுவேன் -2
அதிசயமே என் ஆதாரமே
உமக்கே என் ஆராதனை இயேசய்யா -எந்தன் உயிருள்ள
(2) நீதிமான்களுக்கு வரும் துன்பங்கள் எல்லாமே
அநேகமானாலும் நீரே
விடுவிப்பீர்-2
எனக்காய் நீர் தந்த வாக்குகள் எல்லாம் மாறுவதில்லையே
இன்றுக் காணும் துன்பங்கள் என்னை தொடருவதில்லையே -2
அதிசயமே என் ஆதாரமே உமக்கே எஎன் ஆராதனை -2 என் உயிருள்ள