enthan ullam aantavarai – Enthan Ullam Aandavarai Tamil Christian Catholic Madha Paadalgal

எந்தன் உள்ளம் ஆண்டவரை
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

எந்தன் உள்ளம் ஆண்டவரை – Enthan Ullam Aandavarai Tamil Christian Catholic Madha Paadalgal
பாடல் வரிகள் – மாதா பாடல்
எந்தன் உள்ளம் ஆண்டவரைப் போற்றிப் பாடுமே
எந்தன் மனம் மீட்பரை நினைந்து மகிழுமே – 2
தாழ்ந்த நிலையிலே இருந்த என்னையே
உயர்த்திக் காட்டினார் அவர் பெருமை சேர்த்திட்டார்
அவரை நினைத்து நெஞ்சம் மகிழ்ந்து புகழ்ந்து பாடுவேன்- 2
1. வல்லவராம் கடவுள் எனக்கு அற்புதம் செய்தார்
மீட்பராம் இறைவன் எனக்கு இரக்கம் காட்டினார் -2
இனிமேல் எல்லாத் தலைமுறையும்
எனைப் பேறுடையால் என்றிடுமே
அவருக்கு அஞ்சி நடப்பவர் எவரும் இரக்கம் பெறுகிறார்
அவரை நினைத்து நெஞ்சம் மகிழ்ந்து புகழ்ந்து பாடுவேன்- 2
2. துன்புறும் உள்ளங்களை இறைவன் தேற்றினார்
பசித்தோரை நலன்களால் அவரே நிரப்பினார் – 2
வீழ்ந்தோர் தாழ்ந்தோர் அனைவரையும்
உயர்த்தி மேன்மை பெறச்செய்தார்
அவர் பணி இன்று செய்பவர் எவரும் வலிமை பெறுகிறார்
அவரை நினைத்து நெஞ்சம் மகிழ்ந்து புகழ்ந்து பாடுவேன்- 2