entha malaiyanalum

எந்த மலையானாலும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்த மலையானாலும்
மதிலானாலும் தாண்டிடுவேன்
உங்க தயவால்
எந்த தீயானாலும்
தண்ணீரானாலும்
தாண்டிடுவேன் உங்க தயவால் -2
பள்ளமெல்லாம் நிரம்பிடுமே
பாதையெல்லாம் செழித்திடுமே
ஓயாமல் துதித்திடுவேன்
உம்மை ஓயாமல் உயர்த்திடுவேன்-2
பாடான பாதையெல்லாம்
உம்மை பாடி பாடி தாண்டிடுவேன்
துயரான பாதையெல்லாம்
உம்மை துதித்து துதித்து தாண்டிடுவேன் – எந்த(2) – பள்ளமெல்லாம்
கரடான பாதையெல்லாம்
உங்க கரத்தாலே கடந்திடுவேன்
கசப்பான பாதையெல்லாம்
உங்க நினைப்பாலே ஓடிடுவேன்-2
கசப்பெல்லாம் இனிப்பாகும்
பாதையெல்லாம் செழிப்பாகும்
ஓயாமல் துதித்திடுவேன்
உம்மை ஓயாமல் உயர்த்திடுவேன்-2 – எந்த மலையானாலும்