Ennaiyum Ninaithirae

என்னையும் நினைத்தீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னையும் நினைத்தீரே
என்னையும் அழைத்தீரே – 2
எப்படி நான் நன்றி
சொல்லுவேன்,
என் நாதனுக்கு,
நன்றி சொல்ல நாட்கள்
போதாதே – 2
1. உளையான சேற்றினின்று
தூக்கியெடுத்தீரே,
பரிசுத்த ரத்தத்தாலே
கழுவித் துடைத்தீரே, – 2 எப்படி நான் நன்றி
2. பாவத்திலே மரித்து போன
என்னையும் நினைத்தீரே,
திரு ரத்தம் சிந்தியென்னை,
மீட்டுக்கொண்டீரே, – 2 எப்படி நான் நன்றி
3. ஆத்துமாவை அழிவுக்கு
விலக்கி மீட்டீரே,
கன்மலையின் மேலே
வைத்து பாதுகாத்தீரே – 2 எப்படி நான் நன்றி
4. அலைச்சலைக் கண்டீரே,
கண்ணீரைத் துடைத்தீரே,
கவலையை மாற்றி எம்மை,
கனிவுடன் தேற்றினீரே, – 2 எப்படி நான் நன்றி
5. புத்திரசுவிகாரத்தின்
ஆவியை எனக்கு தந்து,
தகப்பனே என்றழைக்கும்
உரிமையைத் தந்தீரே, – 2 எப்படி நான் நன்றி
என்னையும் நினைத்தீரே பாடல் வரிகள், Ennaiyum Ninaithirae lyrics