Ennai Therinthu Kondarae

என்னை தெரிந்து கொண்டாரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை தெரிந்து கொண்டாரே
தாயின் கருவில் கண்டாரே
என் மீது பாசம் வைத்து ஆதரித்தாரே
எனக்கு ஒரு விலை கொடுத்தார்
உலகத்தில் பிரித்தெடுத்தார்
தன்னுயிரை பாராமல் என்னுயிரை மீட்டாரே
மறக்காதவர் நம்மை வெறுக்காதவர் இயேசு
தகப்பனை புறக்கணித்தேன்
தாய் மனதை மறுதலித்தேன்
பன்றியின் இறைத்தேடி பசியால் நான் அழுதேன்
உன்னை விட்டு விலகிப் போனேன்
ஒரு கெட்ட குமாரன் நானேன் – என்னை தெரிந்து
காட்டத்தி மரக்கிளையில்
காத்திருந்த என் வாழ்வில்
இறங்கிடச் சொன்னாரே
இரக்கமும் தந்தாரே
ஆயக்காரனாய் அலைந்தேன்
அது பாவம் என்று இப்ப உணர்ந்தேன் – என்னை தெரிந்து
ஆடுகள் மேய்த்திடவே
அலைந்து திரிந்தவன் நான்
அரசனாய் மாற்றினீரே அதை நான் மறப்பேனோ
கோலியாத்தை வெல்லும் தாவீதையா நானு
இயேசு நாமம் சொல்லும் போர் சேவகன் தான் நானு – என்னை தெரிந்து கொண்டாரே