ennai surri nan parkkiren

என் கண்ணீரை துடைத்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை சுற்றி நான் பார்க்கிறேன்
நீர் எங்கே என்று தேடுகிறேன்
என்னை நீர் இல்லையே
என் பின்னும் காணவில்லை
இடதும் வலதும் தேடினேன்
நான் காணாத படிக்கு ஒளிந்திருந்தீரோ
என் கண்ணீரை துடைத்து
கண்ணத்தை பிடித்து
முத்தத்தை கொடுத்து தேற்றிடுமே
நான் இருக்கிறேன் என்று தினமும் சொல்லி
சந்தேகங்களை தள்ளி அணைத்திடுமே. -2
எல்லாமே நான் இழந்தாலும்
வாழ்க்கை முடிந்ததென்று கதறினாலும்
மனுஷனின் நேசம் கைவிட்டாலும்
என் மூச்சை கூட நான் வெறுத்திட்டாலும்
இயேசு நீர் மட்டும் என்னோடு கூட இருப்பீர்
உம் அன்பொன்றே
அது அழியாதையா
மனது உடைந்து கரைகிறேன்
என் இருளில் ஒளியாய் வாருமையா
நான் மறுபடியும் கண்டேன்
உமது அன்பை கண்டேன்
போகும் வழியெல்லாம்
நீர் அறிந்திருக்கின்றேன்
உன் பாதம் பற்றி பிடித்தேன்
சாயாமல் கை கொண்டேன்
சோதித்தபின்னும் பொன்னாக நான் விளங்குவேன்
என் கண்ணீர் துடைத்தீர்
கண்ணத்தை பிடித்தீர்
முத்தத்தை கொடுத்து தேற்றினீரே
நான் இருக்கிறேன் என்று
சொல்லி சொல்லி
சந்தேகங்களை
தள்ளி அணைத்திட்டீரே