ennai pataiththavar neere, peyarsolli azhaiththavar neere

என்னை படைத்தவர் நீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை படைத்தவர் நீரே, பெயர்சொல்லி அழைத்தவர் நீரே
உம் கையில் என்னை வரைந்தீரே
என்னை தெரிந்து கொண்டீரே, பிரித்தெடுத்தீரே,
உமக்காய் ஊழியம் செய்ய
என்னை அழைத்தவர் நீரே
உம் ஏக்கம் அறிந்து, திறப்பிலே நின்று
ஜெபிக்கும் வரம் தாருமே
பாரத்தோடும், கண்ணீரோடும் அழுது ஜெபிக்கணுமே
என்னை அழைத்தவர் நீரே
சாத்தானின் தந்திரங்கள் நீர்மூலமாகிட
ஜெப சேணை எழும்பனுமே,
உம் சித்தம் இப்பூவில் நிறைவேற
துதி சேணை எழும்பட்டுமே
என்னை அழைத்தவர் நீரே
நானும் என் வீட்டாரும், உம்மையே சேவிப்போம்
உமக்காய் வாழ்ந்திடுவோம்
உயிருள்ள நாலெல்லாம் உம் வல்ல நாமத்தை பாடி துதித்திடுவோம்
என்னை அழைத்தவர் நீரே