ennai nesikka oruvar untu

என்னை நேசிக்க ஒருவர் உண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை நேசிக்க ஒருவர் உண்டு
என்னில் அன்பு காட்ட ஒருவர் உண்டு-2
என்னை நேசிக்க ஒருவர் உண்டு
அவர் தான் என் இயேசு
அவர் தான் என் இயேசு
அவர் தான் என் நேசர்
அவர் தான் என் அன்பர்
அவர் தான் என் மீட்பர்
1.மனுஷனை நம்புவதை காட்டிலும்
கர்த்தர் பேரிலே பற்றுதலை இருப்பது -2
என்றென்றும் நலம் – அவர் தான்
2.தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும் – 2
கர்த்தர் இயேசு என்னை கைவிடமாட்டார் – அவர் தான்
3.உற்றார் உறவினர் என்னை மறந்து போனாலும்
கர்த்தர் இயேசு என்னை – 2
அணைத்து சேர்ப்பார் – அவர் தான்