ennai nataththukinreer

என்னை நடத்துகின்றீர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை நடத்துகின்றீர்
ஒரு தகப்பன் போல
என்னை தேற்றுகின்றீர்
அன்பு தாயைப்போல
கரம் பிடித்தீர் உயிர் நண்பராக – வழி
காட்டுகின்றீர் நல்ல மேய்ப்பனாக
நன்றி இயேசுவே-2
நடத்தி வந்திரே நலமாய் என்றுமே
சேற்றில் இருந்து என்னை தூக்கி எடுத்து
பாவம் எல்லாம் போக்கி உம்
பிள்ளையாக்கினீர்
உமதன்பின் அகலம் ஆழம்
உயரம் அறியவே
என் கண்களை திறந்திடும்
நல்ல நேசரே
வாழ அறிய என்னையும்
வாழ வைக்கின்கிறீர்
கிருபை வரங்கள் தந்து
பயன்படுத்துகிறீர்
பேதைகளை ஞானியாக்குபவர்
எளியோனையும் கண்ணோக்குகிறீர்
நானே வழியும் சத்தியமும்
ஜீவன் என்றீர்
நித்திய ஜீவனை எனக்கும் வாக்களித்தீர்
பாவி நானும் பரலோகம் வர
சிலுவையில் மரித்து
உயிர்த்தெழுந்தீர்