ennai nataththa ventiya vazhiyila nataththungka

நான் ஒன்றுமில்லாதவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை நடத்த வேண்டிய வழியில நடத்துங்க
என்னை சேர்க்க வேண்டிய இடத்திலே சேருங்க – 2
நான் ஒன்றுமில்லாதவன்
என்னை உருவாக்கிடுங்க
நான் களிமண்ணைப்போல
என்னை வனைந்து கொள்ளுங்க – 2 – என்னை
ஒப்புக்கொடுத்தேன் உங்க சித்தபடி
என்னை நடத்தி செல்லும் உங்க திட்டபடி – 2
யோனா போல தர்ஷிசுக்கு போகமாட்டேன்யா
நினிவேக்கு போகி நிறைவேற்றுவேனைய – அந்த
யோனா போல வழிமாறி போகமாட்டேன்யா
நினிவேக்கு போகி நிறைவேற்றுவேனைய – 2 – என்னை
எளியவனை நோக்கி பார்க்கின்றீர்
தாழ்ந்தவனை நீர் உயர்த்துகிறீர் – 2
லோத்து மனைவி போல நானும் திரும்ப மாட்டேன்யா
திரும்பி உப்பு தூனாய் போக மாட்டேன்யா,அந்த – 2 – என்னை
எனக்காக யாவும் செய்பவரே
எண்ணில் என்றும் இயேசு வாழ்பவரே – 2
கேயாசிய போல பண ஆசை வேணாம்யா
எலிசா போல நானும் மாற வேணும்ய
அந்த கேயாசிய போல பண ஆசை வேணாம்யா
எலிசா போல இரட்டிபான வரங்கள் வேணும்ய – என்னை