ennai meetka vantheere

என்னை மீட்க வந்தீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை மீட்க வந்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
உம்மை போல தேவன் இல்லையே
இரத்தம் சிந்தி மீட்டீரே
பாவ பாரம் சுமந்து தீர்த்தீரே
சிலுவையின் சுதந்திரம் நீரே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
என் பாவம் போனதே
ஓ இன்றைய நாள் ஆனந்தமே
நீர் என்றும் என்னோடே
உலகத்தை ஜெயித்தீரே
ஜீவ கிரீடம் எனக்கு கொடுத்தீரே
உந்தன் மகிமையில் சேர்த்துக்கொள்வீரே
எக்காளம் முழங்கிட
மோட்சக்கரையில் என்னை சேர்த்திட
வானிலே பவனி வருவீரே
ஓ என் தேவனே
என் ராஜனே
என்னை மீட்டு கொண்டீரே