ennai meetka ummai thantheer

என்னை மீட்க உம்மைத் தந்தீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை மீட்க உம்மைத் தந்தீரே
பாவம் கழுவ காயப்பட்டீரே
பாரம் எல்லாம் சுமந்தீரே
சிங்காசனத்தை இழந்தீரே -2
என் நேசரே என் நேசரே
நேசித்தீரே நன்றி ஐயா-2
1. பாவி என்னை நேசித்தீரே-துரோகம்
செய்த போதும் என்னை நினைத்தீரே
உம் காயப்பட்ட கரத்தாலே
உம் மார்போடென்னை அணைத்தீரே
2. திக்கற்று நான் திரிந்தேனே
தேற்றும் தந்தை தாயாய் நீர் வந்தீரே
அரவணைக்கவும் ஆதரிக்கவும்
என் இயேசு என்னோடிருந்தீரே
உம்மை நேசிப்பேன் - (2)
வாழ்நாளெல்லாம் உம்மை நேசிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
என் இயேசுவே ஆராதிப்பேன்
சாஷ்டாங்கம் செய்ய வந்தேன் இயேசுவை
சாஷ்டாங்கம் செய்ய வந்தேன் இயேசுவை