Ennai Ithuvarai

என்னை இதுவரை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என்னை இதுவரை நடத்தி வந்ததற்கு
நான் எம்மாத்திரம் தேவா
செய்த நன்மையை நினைக்கும் போது
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
என் கால்கள் தள்ளாட விடவில்லையே
என் தேவன் என்னை கைவிடவில்லையே
விழும்போதெல்லாம் தூக்கினீரே
விலகாமலே துணை நின்றீரே
கண்ணீரின் பாதையை களிப்பாக்கினீர்
கலங்கி தவித்த நேரம் அணைத்துக் கொண்டீர்
உம் தோளின் மேல் சுமந்து வந்தீர்
உந்தன் சிறகால் என்னை மூடிக்கொண்டீர்
துரோகங்களால் மனம் சோர்ந்த போதும்
விரோதங்களால் தடுமாறும்போதும்
உம் வார்த்தையால் திடப்படுத்தி
உம் சேவை செய்திட பெலனளித்தீர்