engkeyum eppoothum unnootu – Engeayum Eppothum Unnodu

எங்கேயும் எப்போதும் உன்னோடு
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

எங்கேயும் எப்போதும் உன்னோடு – Engeayum Eppothum Unnodu
பாடல் வரிகள் – (காணிக்கை பாடல்)
எங்கேயும் எப்போதும் உன்னோடு ஒன்றித்து
எந்நாளும் நான் வாழும் வரம் வேண்டினேன் – 2
உன் உருவினில் எனை படைத்து
உன் இதயத்தை என்னுள் பதித்து
நீயாக நான் வாழ என்னை படைத்தாயே
உன்னில் இணைத்தாயே
1. கோதுமை கதிராக திராட்சை கொடியாக
உன்னோடு இணைந்து பல நூறு தருவேன் – 2
உன் வார்த்தை கேட்டு உன் ஒளியில் நடந்து
நற்செய்தியாகவே நான் வாழுவேன் – 2
இறைவா உன்னோடு இருப்பது ஆனந்தமே
இறைவா உனக்காக வாழ்வது பேரின்பமே (எங்கேயும்)
2. நதி தேடும் கடலாக அலை தேடும் கரையாக
ஓயாமல் உனை தேடும் ஒரு சீடன் நானே – 2
உன் நிழலில் வாழ்ந்து உன் அருளில் நனைந்து
உன் அன்பு தூதனாய் நான் மாறுவேன் – 2
இறைவா உன்னோடு இருப்பது ஆனந்தமே
இறைவா உனக்காக வாழ்வது பேரின்பமே – (எங்கேயும்)