Engal Vazhnaalellaam Kalikurndhu Magizhndhida

எங்கள் வாழ்நாளெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

C maj, 4/4, T-108
எங்கள் வாழ்நாளெல்லாம்
களிகூர்ந்து மகிழ்ந்திட
காலையிலே உம் கிருபையினால்
திருப்தியாக்குமையா
1.தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும்
துன்பம் கண்ட வருடத்திற்கும்-2
சரியாய் இன்று மகிழச்செய்து
சந்தோஷத்தாலே நிரப்புகிறீர்-2
நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
நீர்தானே நீர்தானே அடைக்கலம் நீர்தானே
என் தஞ்சம் நீர்தானே
2.புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் தஞ்சம் நீர்தானே-2
எனது காப்பாளர் நீர்தானே
இறுதிவரைக்கும் நீர்தானே-2-நீர்தானே
3.உலகமே உருவாக்கப்படும் முன்னே
மலைகள் குன்றுகள் தோன்றும் முன்னே-2
எப்போதும் இருந்தவர் நீர்தானே
என்றும் இருப்பவர் நீர்தானே-2-நீர்தானே
4.செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்-2
அற்புத அடையாளம் காணச் செய்யும்
ஆதி திருச்சபை தோன்றச் செய்யும்-2-நீர்தானே