endhan devaa enakku irangume

எந்தன் தேவா எனக்கு இரங்குமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எந்தன் தேவா எனக்கு இரங்குமே
எந்தன் பாவக் கறைகள் போக்கிடுமே
உமது இரக்கத்தால் என் மீறுதல் மன்னியுமே
சுத்த இருதயம் சிருஷ்டியுமே
நிலையான ஆவிதனை
எந்தன் உள்ளத்தில் புதிதாக்குமே
சந்தோஷ மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யுமே
உமது சமூகத்தை விட்டு என்னை
தள்ளாதிரும் தேவனே
உம் ஆவியை எடுக்காதிரும்
இரட்சண்ய சந்தோஷத்தை திரும்ப தாருமே
ஆண்டவரே என் உதடுகளை
திறந்தருளும் ஐயா
என் நாவு உந்தன் புகழ் பேசட்டும்
உடைந்த உள்ளமாய் உம்பாதம் வந்தேனையா