Enathu uyire iyesu raja

எனது உயிரே இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனது உயிரே இயேசு இராஜா
உம்மை ஆராதிப்பேன்
எனது ஏக்கமே இயேசு இராஜா
உம்மை ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை
நல்லவரே வல்லவரே
உமக்கே ஆராதனை -2
1.எல்லையில்லா நன்மைகளால் நிரப்பினவரே ஆராதனை
எல்லையில்லாக் கிருபைகளால் நிரப்பினவரே ஆராதனை
உள்ளங்கையில் வரைந்துவைத்து ரசிக்கும் உம்மை ஆராதிப்பேன் -2
2.எனது பாவம் எனது சாபம் போக்கினவரே ஆராதனை
எனது நோய்கள் எனதுச் சுமைகள் நீக்கினவரே ஆராதனை
வலது கரத்தால் தாங்கி என்னை நடத்தும் உம்மை ஆராதிப்பேன் -2