Enathu devan enakkulle

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனது தேவன் எனக்குள்ளே
என்றும் நிழலாய் இருக்கின்றார்
கணிவுள்ள இதயம் கொண்டவர் தான்
கனிகளை தந்து நிரப்புகிறார்-2
எனது தேவன் எனக்குள்ளே..
அதிகாலையிலே எழுப்புகிறார்
துதி ஸ்தோத்திரங்களை ஏற்பதற்கு
ஆ... ஆ... ஆ... ஆ...
அதிகாலையிலே எழுப்புகிறார்
துதி ஸ்தோத்திரங்களை ஏற்பதற்கு
மதிநிறை ஒளியைப் பாய்ச்சுகிரார்
மகிழ்வுடன் வாழ்வை துவக்கிடவே-2
-எனது தேவன் எனக்குள்ளே
புது கிருபை தினம் அளிக்கின்றார்
எதை கேட்டாலும் தருகின்றார்
ஆ... ஆ... ஆ... ஆ...
புது கிருபை தினம் அளிக்கின்றார்
எதை கேட்டாலும் தருகின்றார்
அதனதன் காரியம் வாய்த்திடவே
அன்புடன் பகிர்ந்து கொடுக்கின்றார்-2
-எனது தேவன் எனக்குள்ளே
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
அகிலத்தை வார்த்தையால் படைத்தவரே
ஆ... ஆ... ஆ... ஆ...
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
அகிலத்தை வார்த்தையால் படைத்தவரே
சுகித்தேன் உமது ஈவுகளை
(இனி) புகலிடம் என்றும் உம் பதமே-2
-எனது தேவன் எனக்குள்ளே