Enakku kuriththathai niraivetra vallavare

எனக்கு குறித்ததை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்கு குறித்ததை நிறைவேற்ற வல்லவரே
எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
தாமதித்தாலும் தடைவந்தாலும்
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவீர்
ஆமேன் அல்லேலூயா-2
1). குழியில் போட்டாலும்
சிறையில் அடைந்தாலும்
தரிசனம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே -2
ஆமேன் அல்லேலூயா-2
2). சரீரம் செத்தாலும்
கர்ப்பங்கள் அடைந்தாலும்(அடைத்தாலும்)
வாக்குத்தத்தம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே
ஆமேன் அல்லேலூயா-2
3). பார்வோன் எதிர்த்தாலும்
செங்கடல் தடுத்தாலும்
கானானை தந்தவர் நிறைவேற்ற வல்லவரே ( அ)
வாக்குத்தத்தம் தந்தவர் நிறைவேற்ற வல்லவரே
ஆமேன் அல்லேலூயா-2
எனக்கு குறித்ததை பாடல் வரிகள், Enakku Kurithathai lyrics.