enakkaka allavoo?

எனக்காக அல்லவோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

எனக்காக அல்லவோ?
1.பாவக்கறை படாத – உம்
கரங்களை ஆணிகள் துளைத்ததேன்? – (2)
பாதகன் எனக்காக அல்லவோ? – (2)
இயேசுவே கல்வாரி நாயகா!
கெட்ட வழி செல்லாத – உம்
பாதங்களில் ஆணிகள் பாய்ந்ததேன்? – (2)
கொடியவன் எனக்காக அல்லவோ? – (2)
இயேசுவே கல்வாரி நாயகா!
தீய வினை நினையாத – உம்
இதயத்தை ஈட்டி பிளந்ததேன்? – (2)
தீயவன் எனக்காக அல்லவோ? – (2)
இயேசுவே கல்வாரி நாயகா!
4.அசுத்த எண்ணம் தோன்றாத – உம்
தலையை முட்கிரீடம் வதைத்ததேன்? -(2)
அநீதன் எனக்காக அல்லவோ? – (2)
இயேசுவே கல்வாரி நாயகா!
சிலுவையண்டை வந்து நிற்கும்
இப்பாவிக்கு மன்னிப்பு அருளுவீர்! – (2)
சுத்தஇதயம் நீரெனக்கு தாருமே!
இயேசுவே கல்வாரி நாயகா! – (2)