enakkaga yavaiyum seithavarey

எனக்காக யாவையும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Chord F
எனக்காக யாவையும் செய்கின்றவர்
என் கர்த்தர் வாக்கு மாறிடாரே
ஜெபத்தை கேட்டிடும் தகப்பன் அவர்
மன விருப்பத்தின்படியே செய்திடுவார்
எங்கள் ஆராதனை
துதி ஸ்தோத்திரங்கள்
எல்லாமே உமக்குத்தானே 2
நீர் ஒருவரே பாத்திரர் (நீங்க)
1.தாயின் கருவிலே என்னை கண்டவர்
பெயர் சொல்லி என்னை அழைத்தவர்
குறித்த காலத்தில் உயர்த்திடுவார்
சொன்னதை செய்து நடத்திடுவார்
2.எந்தன் கர்த்தரே எந்தன் மேய்ப்பரே
வழுவாமல் என்னை காப்பாரே
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
3.உள்ளங் கையில் என்னை வரைந்தவர்
கண்மணிபோல் என்னை காப்பவர்
நன்மையால் முடிசூட்டிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார்
4.மீண்டும் வருவேன் என்று சொன்னவர்
சீக்கிரமாய் அவர் வந்திடுவார்
நம்மை மறுரூபம் ஆக்கிடுவார்
நம்மை மகிமையில் சேர்த்திடுவார்
எனக்காக யாவையும் பாடல் வரிகள், Ennakkaga Yaavaiyum Lyrics