Enakkaaga Vaazhnthathu Pothumae

எனக்காக வாழ்ந்தது போதுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனக்காக வாழ்ந்தது போதுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2
போதுமே போதுமே போதுமே
எனக்காக வாழ்ந்தது போதுமே
வேண்டுமே வேண்டுமே வேண்டுமே
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2
எனக்காக எனக்காக எனக்காக
வாழ்ந்தது போதுமே
1. கிதியோனைப் போல் தைரியமாய்
உமக்காக செயல்பட வேண்டுமே – 2
விக்கிரகத் தோப்புக்களை அழித்திடும் (உங்க)
வல்லமையை எனக்குத் தாருமே – 2
தாருமே தாருமே தாருமே உங்க
வல்லமையை எனக்குத் தாருமே – 2
2. பினகாசை போல் வைராக்கியமாய்
உமக்காக வாழ்ந்திட வேண்டுமே – 2
தேசத்தை அசைத்திட வேண்டுமே உங்க
வல்லமையை எனக்குத் தாருமே – 2
தாருமே தாருமே தாருமே உங்க
வல்லமையை எனக்குத் தாருமே – 2