enadhu nesar

எனது நேசர் என்னோடுண்டு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எனது நேசர் என்னோடுண்டு
இனியும் தோல்வி எனக்கு இல்லை
எனது இரட்சகர் என்னில் உண்டு
இனியும் வெட்கம் எனக்கு இல்லை
தோல்விகள் என்னை சூழ்ந்தாலும்
தொடர்ந்து அவரில் ஓடிடுவேன்
கலக்கம் என்னில் வந்தாலும்
கலங்கிடாமல் சென்றிடுவேன்-2
கர்த்தர் என் மேய்ப்பரே
இனி குறைவே எனக்கில்லையே
1.எனக்கு எதிராய் உருவாகும்
ஆயுதம் ஒன்றும் வாய்க்காதே
எனது பக்கம் ஆயிரங்கள்-2
விழுந்தாலும் என்னை அணுகாதே-2
கர்த்தர் என் தஞ்சமே
இனி பயமே எனக்கில்லையே-2
2.என்னோடே போர்செய்த மனிதர்களை
தேடியும் காணாமல் இருப்பேனே
வெட்கம் அடைந்த தேசத்திலே-2
கீர்த்தியாய் என்றும் வாழ்வேனே-2
கர்த்தர் என் பட்சமே
இனி கலக்கமே எனக்கில்லையே-2
3.தடைகளை என்றும் உடைக்கிறவர்
எனக்கு முன்னே செல்லுகிறார்
யுத்தங்கள் என்மேல் எழுந்தாலும்-2
பயப்படாமல் அமர்ந்திருப்பேன்-2
கர்த்தர் என் சேனையே
இனி தடையே எனக்கில்லையே-2