en uyirootu uyirana thevane

என் உயிரோடு உயிரான

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் உயிரோடு உயிரான தேவனே
உம்மைப் போல் எனக் யாருண்டய்யா
என் நிழலோடு நிழலான இயேசுவே
உம் அன்புக்கு இணையில்லையே (2) – என் உயிரோடு
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே (4)
வேதத்தை தியானிக்க நானும் மறந்தேன்
உம்மைத் துதிக்க நான் மறந்தேன் (2)
இயேசுவே நீர் என்னை மறப்பீரோ
உம் அன்பு என்றும் பெரிதன்றோ
உம் அன்பு என்றும் பெரிதன்றோ (2) – எந்தன் இயேசுவே
வேலை நாட்களில் உம்மைத் தேட மறந்தேன்
துக்க நாட்களில் உம்மைத் தேடுகிறேன் (2)
இயேசுவே எனக்கு யாருண்டு
உம்மைப் போல் என்னை நேசிக்க
உம்மைப் போல் என்னை நேசிக்க(2) – எந்தன் இயேசுவே