en ullam nanriyal patituthe

என் உள்ளம் நன்றியால் பாடிடுதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் உள்ளம் நன்றியால் பாடிடுதே
பரிசுத்த தேவனே உம்மை ஆராதிப்பேன்
உள்ளம் நிறைவோடு உம்மை தொழுகிறேன்
உள்ளம் சினம் தாழ்த்தி வணங்குகிறேன்
Ch : என் உள்ளம் நன்றியால் பாடிடுதே
உன்னத இயேசுவை போற்றிடுதே -2
உயர்ந்தவர் சிறந்தவர் உமக்கே நிகரே இல்லை
காப்பவர் காண்பவர் நன்கு அறிந்துள்ளேன்
உம்மையே என்றும் நான் பாடிடுவேன்
1. நீதியின் தேவன் நீர் எழுந்திரே
சிறுமைப் பட்டோரை நீர் இரட்ச்சிக்கவே
உம் மகிமை எங்கும் விளங்குதே
அதை கண்ட கண்கள் அதிர்ந்ததே
இராஜாதி இராஜாவே பயங்கரமானவரே
2. உம் வாசஸ்தலம் சீயோனிலே
நீர் தங்கும் இடம் சாலேமிலே
யாக்கோபின் தேவன் நீர் உயர்ந்தவர்
என் பக்கம் நீரே நான் கலங்கிடேன்
யுத்தங்கள் ஜெயித்தவர் தோல்விகள் எனக்கில்லையே
3. என் இயேசு இராஜா நீர் வாழ்கவே
உம் இராஜியம் என்றும் நிலைக்குமே
எதிர்போரின் சூழ்ச்சியை நீர் முறித்திரே
உம் ஜெய தொணி எங்கும் முழங்குதே
இயேசுவே இராஜாவே என்னை ஏற்றுக்கொள்ளும்