en ulla kudilil

என் உள்ள குடிலில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil En Anbu Malaril
என் உள்ளக் குடிலில்
என் அன்பு மலரில்
எழுவாய் என் இறைவா
வருவாய் இயேசு தேவா -2
1.மாளிகை இல்லை
மஞ்சமும் இல்லை
மன்னவன் உனக்கு
கூடமும் இல்லை
கோபுரம் இல்லை
கொற்றவன் உனக்கு -2
இந்த ஏழை தங்கும் இல்லம்
வானம் கூரையாக கொண்ட பூமிதானே
2.நண்பர் வாழ உயிர்தருதல்
ஒன்றுதான் அன்பின் மாண்பு
பந்த பாசம் தனை கடந்து
செய்தால்தான் திரு தொண்டு -2
இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும்
வாழ்வின் நூலில் எழுதவேண்டும்
அன்பின் இறைவனே