en thevan enrum sarva vallavar

சர்வ வல்லவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் தேவன் என்றும் சர்வ வல்லவர்
அவரால் கூடாதது ஒன்றுமில்லை
தேவன் என்றும் சர்வ ஞானியே
அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை -2
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என் தேவனுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.
1)நான் காணாத காரியத்தை தேவன் கண்டு
வாக்குத்தமாக எனக்குத் தந்தார்
செத்துப்போன சாராளின் கர்ப்பத்திலே
ஈசாக்கு பிறப்பதை தேவன் கண்டார்.
சொன்னதை நிச்சயம் செய்து காட்டுவார்
வாய்ப்பே இல்லைனாலும் செய்து முடிப்பார்-2.
2)புதிய புதிய அற்புதங்கள் தேவன் செய்வார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்வார்
வனாந்திர கானான் பயணத்திலும்
மன்னாவை உணவாக போழியச் செய்வார்
அனுதினம் அற்புதங்கள் செய்திடுவார்
இயற்கைக்கு மிஞ்சியும் செய்யவல்லவர் -2