En Thalaiva Lyrics

என் தலைவா கனிவுடன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் தலைவா
கனிவுடன் எனை காக்கும் இறைவா – 2
கண்ணீரோடு வந்த என்னை
களிப்பாக மாற்றினீர்
விசாலத்தில் வைத்து என்னை
செழிப்பாக்கினீர்
அனுபல்லவி
அன்பே உமக்கு என் ஆராதனை
அழகே அழகே என் ஆராதனை
1.துணையாக எனக்காக
யாரென்றழுதேன் – ஐயோ
யாரென்றழுதேன்
கலங்காதே நானுந்தன்
துணையென்றீரே
கண்ணீரின் முழங்கால் வீணாவதில்லை -2
எனக்காக யுத்தம் செய்வீர் – நீர்
எனக்காக யுத்தம் செய்வீர்
சாம்பலையும் சிங்காரமாய் மாற்றும் வல்ல தெய்வமே
இரட்டையும் பட்டுடுப்பாய் மாற்றி விட்டீரே – அன்பே உமக்கே
2.தினந்தோறும் எனை பார்க்கும்
உம் முகம் அழகு – அது
எத்தனை அழகு
யுத்தத்துக்கு பழக்குவிக்கும் உம் கரம் அழகு
உம் நாம மகிமை என் வாழ்வின் உயர்வு -2
உமக்கென்றும் ஆராதனை – என் இயேசுவே
உமக்கென்றும் ஆராதனை
துதியினாலே எரிகோ மதில் தூள் தூளாய் உடைந்திடும்
கொல்ல வரும் பட்டயமும் இரத்தம் பார்த்து கடந்திடும் – அன்பே உமக்கே