En Thaevanae En Iyaesuvae

என் தேவனே என் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

என் தேவனே என் இயேசுவே
உம்மை நான் ஆராதிப்பேன்
ஆராதனை ஆராதனை
ஆராதனை ஐயா ஆராதனை
புல்லுள்ள இடங்களில் என்னை மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறீர் – ஆராதனை – 4
சத்துருக்கள் முன்னிலையில் ஒரு பந்தி
எனக்காக ஆயத்தம் செய்திடுவீர் – ஆராதனை – 4
மரண பள்ளத்தாக்கில் நடந்தாலும்
உம் கோலும் கைத்தடியும் தேற்றிடுதே – ஆராதனை – 4
நன்மையும் கிருபையும் தொடர்ந்திடுதே
வாழ்நாளெல்லாம் அது நீடிக்குதே – ஆராதனை – 4
உம் ஆலயத்தில் நான் ஆராதித்து
நீடித்த நாட்களாய் வாழ்ந்திருப்பேன் – ஆராதனை – 4
மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் போல்
தேவனே என் ஆத்துமா கதறிடுதே – ஆராதனை – 4