En Siluvai Eduthu pinnae vaarean

என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் சிலுவை எடுத்துப் பின்னே வாறேன்
பல்லவி
என் சிலுவை எடுத்து என் இயேசுவே
இச்சணம் பின்னே வாறேன்.
அனுபல்லவி
இந்நில மீதினில் எனக்காயுயிர் விட்டீர்
இரட்சகரே! ஏனக்குள்ளயாவும் விட்டு. – என்
சரணங்கள்
1.உலகும்மை விட்டிடினும் – உம தயையால்
உம்மை நான் பின் செல்லுவேன்
அலகை என்மேல் பாய்ந்து அதிகமாய் எதிர்த்தாலும்
அஞ்சாமல் போர்செய்து அவனை மேற்கொண்டு நான் – என்
2.என்றன் சுதந்தரத்தை – இழக்கினும்
சொந்தம் நீரே எனக்கு
பந்து சனங்களும் பற்றுறு நேசரும்
பகைத்துப் பழிப்பின் என் பங்கு நீரல்லவோ! – என்
3.பாடுகள் பட்டிடுவேன் – உம்மோடு நான்
பாரநுகஞ் சுமப்பேன்
ஆடுகளுக்காக அரிய சீவன் தந்த
அன்பான மேய்ப்பரே ஆடுகளை மேய்ப்பேன். – என்
4.ஆசை மேற்கொள்ள விடேன் – கெட்டலோக
பாசம் அணுகவிடேன்
ஈசன் லோகத்திலென்றும் நேசமுடனே தங்கி
மாசுகளற உந்தன் தாசனாய் விளங்கிட. – என்