en samugam un mun

என் சமுகம் உன் முன் செல்லும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் சமூகம் உன் முன் செல்லும்
ஒன்றுக்கும் கலங்காதே
உன்னை ஒரு போதும் கைவிடமாட்டேன்
அழைத்தது நான் தானே
1. ஆதி தகப்பனான அந்த ஆபிரகாமை
அழைத்தது நான் – 2
கரம் பிடித்தவனை கடல் மணலளவாய்
கர்த்தர் நான் நடத்தவில்லையா? – 2
2. ஈசாக்கின் தேவனும் நான் அந்த
யாக்கோபின் தேவனும் நான்
அடிமையாய் போன யோசேப்பை தேசத்தின்
அதிபதியாக்கியதும் நான்
3. ஆடுகள் பின் அலைந்த அந்த
தாவீதை அழைத்ததும் நான்
அந்த தாவீதின் வேரில் கிளையாய் துளிர்த்தவர்
தலையை நான் உயர்த்தவில்லையா?
4. யாருக்கும் அடிமை இல்லை – நீ
எவரிலும் தாழ்வதில்லை
ராஜாவைத் தள்ளி உன்னை ராஜாவாய் ஆக்கும்
ராஜாதி ராஜனும் நான்