en nesarin marpinil saynthu – En Neasarin maarbinil saainthu

என் நேசரின் மார்பினில் சாய்ந்து

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் நேசரின் மார்பினில் சாய்ந்து – En Neasarin maarbinil saainthu
என் நேசரின் மார்பினில் சாய்ந்து
என் இயேசுவுடன் கை சேர்த்து
நடப்பேன் நடப்பேன் அது சுகமே
நடப்பேன் நடப்பேன் அது சுகமே
அழகே பிரியமே ரூபவதியே
வெண்புறாவே என்றழைத்தார்
அழகே பிரியமே ரூபவதியே
வெண்புறாவே என்றழைத்தார்
காட்டு மரங்களில் கிச்சிலி போல
நேசர் நின்றார் என் அருகினிலே
சுகமே சுகமே அவர் நிழல் சுகமே
சுகமே சுகமே அவர் நிழல் சுகமே
விருந்துசாலைக்குள் அழைத்துச்சென்றார்
கனி ரசத்தாலே மகிழச்செய்தார்
விருந்துசாலைக்குள் அழைத்துச்சென்றார்
கனி ரசத்தாலே மகிழச்செய்தார்
நேசரின் கொடியும் என் மேல் பறக்க
அணைத்துக்கொண்டாரே வலக்கரத்தால்
சுகமே சுகமே அவர் கரம் சுகமே
சுகமே சுகமே அவர் கரம் சுகமே
நேசமே என்னுடன் கானகப்பாதை
வந்திடுவாயோ என அழைத்தார்
நேசமே என்னுடன் கானகப்பாதை
வந்திடுவாயோ என அழைத்தார்
உயர்வோ தாழ்வோ உம்முடன் நடக்க
உதவி செய்யும் என கரம் பிடித்தேன்
சுகமே சுகமே இயேசு என் சுகமே
சுகமே சுகமே இயேசு என் சுகமே