En nesar venmaiyum sivappumanavar

அவர் அழகு பார்வையால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

En nesar venmaiyum sivappumanavar – என் நேசர் வெண்மையும்
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)
1.சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
அழகில் சிறந்தவர் நேசத்தால் கவர்ந்தவர் (2)
தலைதங்க மயமானவர் தரணியில் இணையற்றவர் (2) -அவர் அழகு
2.கந்தவர்க்க கன்னங்கள் லீலிபுஷ்ப உதடுகள்
இரத்தின அங்கங்கள் பொன்வளையல் கரங்கள் (2)
தண்ணீர் நதிஓரமாய் தங்கும் புறாவின் கண்கள்(2) -அவர் அழகு
3.ரூபமுள்ளவர் இன்பமானவர்
இதயம் கவர்ந்தவர் என்னில் வசிப்பவர் (2)
என்னவென்று சொல்லி பாடுவேன்
என் நேசர் அழகு ரூபத்தை(2)
என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பேர்களில் சிறந்தோர் (2)
அவர் அழகு பார்வையால் என்னை கவரசெய்தவர்
அவர் அன்பின் பாசத்தால் என்னை திகைக்க செய்தவர்(2)