en natkalai ennum arivinai

என் நாட்களை எண்ணும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் நாட்களை எண்ணும் அறிவினை
எனக்குத் தாருமே
என் போர்களை வெல்லும் பெலத்தினை
தினமும் தாருமே.
பல்லவி
நீடித்த நாட்களாலே – உன்னைத்
திருப்தியாக்கிடுவேன்
பாடித்துதித்திடு நின்
பயங்கள் நீங்குமென்றீர்
அல்லேலூயா (4) நன்றி ஐயா (4)
என்நெருக்கத்தில் உம்மைக் கூப்பிட்டேன்
இரங்கி விடுவித்தீர்;
என் கால்களும் மண்ணில் சறுக்கிடில்
கிருபை தாங்கிடும்
நான் கலங்கியே நின்ற வேளையில்
கண்ணீர் துடைத்திட்டீர்
என் காலங்கள் உந்தன் கரத்தினில்
கனிவாய் ஈந்திடும்.