En meethaa Iththanai Anbu song lyrics

என்மீதா இத்தனை அன்பு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

என் மீதா இத்தனை அன்பு
என் இயேசு ராஜா
என் மீதா இத்தனை கிருபை
என் இயேசு தேவா -(2)
உளையான சேற்றில்
உளர்ந்திட்ட எனக்காய்
உம் ஜீவன் தந்தென்னில்
உயிர் வாழ வைத்தீர் -(2)
எனக்காக ஜெனித்தீர்
எனக்காக மரித்தீர்
எனக்காக உயிர்த்தீர்
எனக்காக வருவீர் -(2) -என் மீதா
உயிர் வாழ விரும்பாமல்
உயிர் மாய்க்க துணிந்தேனே
நீர் என்னுள் வந்ததால் – உம்
கிருபையால் வாழ்கிறேன் -(2)
(என்) ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை பெரியது
நான் நினைத்ததை பார்க்கிலும்
உம் அன்பு உயர்ந்தது -(2) – என் மீதா
சிறகடிக்க முடியாமல்
சிதைந்துப் போய் கிடந்தேனே
சிலுவையின் அன்பினால்
சிகரம் தொட வைத்தீரே -(2)
பட்சமாய் வந்தீரே
பாசத்தை பொழிந்தீரே – நான்
பாவியாய் இருந்த போதும்
மார்போடு அணைத்தீரே -(2) – என் மீதா