en manavalane ennaik kollaikkontavare

என் மணவாளனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் மணவாளனே என்னைக் கொள்ளைக்கொண்டவரே
உம் அன்பை எண்ணி எந்நாளும் பாடுவேன் -2
Chorus:
தாயினும் மேலாய் அன்பு வைத்தவர்
தந்தையைப்போல நடத்தி வந்தவர் -(2)
உம்மைப்போல யாரும் இல்லையே
உங்க அன்பைப்போல எதுவும் இல்லையே
1.அந்தக் கொரக்குருசில் என் காயங்கள் ஏற்று
என் காயங்களை முற்று சகித்தவரே -(2)
உம் தழும்புகளாளே எனக்கு சுகத்தை தந்து
என்னைப் பெலவானாய் நடக்கச் செய்தவரே –(2)
2. சிலுவையில் எனக்காய் பாவத்தை ஏற்று
என் பாவங்களை சுமந்து தீர்த்தவரே -(2)
நீர் ஏற்றப் பாவத்தினாலே எனக்கு நீதியை தந்து
என்னைக் கெம்பீரமாய் நடக்கச் செய்தவரே –(2)
அன்பே ஆருயிரே என்னை வாழவைக்க மண்ணில் வந்தீரே , அன்பே ஆருயிரே என்னை வாழ வைத்தீரே. –(2)