en manasellam ungkala paththi nenappu thanappa

என் மனசெல்லாம் உங்கள

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் மனசெல்லாம் உங்கள பத்தி நெனப்பு தானப்பா
என் இதயமே உமக்காகத்தான் இயங்குகின்றன
நீங்க இல்லா வாழ்க்கைய நெனச்சிட முடியல
உங்ககிட்ட பேசாம இருக்கவே முடியல
உயிரே ஆருயிரே
என்னைக் கவர்ந்த என் பேரழகே
1. பேதுருவ போல வழி மாறி போனாலும்
உன் முகம் பார்த்த பின்பும் மறுதலித்தாலும்
எங்கே போனாலும் உம்மை விட்டு தூரம் போனாலும்
என் மேல வச்ச பாசம் பிரம்மிக்க செய்யுது
உயிரே ஆருயிரே என்னை கவர்ந்த பேரழகே
2. செத்தவன போல உம்மை விட்டு போனாலும்
உன் சித்தம் அறியாமல் வாழ்ந்து வந்தாலும்
ஏனோ தெரியல என் மீது உந்தனின் நேசம்
உன் அழகான கண் விழிகள் என்னை கண்டது
உயிரே ஆருயிரே என்னை கவர்ந்த பேரழகே