en manam engum niraindirukkum

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் மனமெங்கும் நிறைந்திருக்கும்
என் சிந்தையிலே உறைந்திருக்ககும்
இயேசுவே ஆண்டவர் இயேசுவே ஆண்டவர்
இடையர் கூடி வர அறிஞர் தேடி வர
தூதர் பாடி மகிழ விண்ணோர்கள்
பண்பாட மண்ணோர்கள் கொண்டாட
என்றென்றும் மண்ணில் சமாதானமே…
1. பாடாத ராகமானேன்
ஒளிராத தீபமானேன் விடியாத
இரவானேன் முடியாத கதையானேன்
எனது நிழலும் என்னை ஒதுக்கிட
எனது நிலை என்னவென்று நான் காணவே
என் கால்கள் என் பாதை
என் தீபம் என் தேவன்
எந்நாளும் நின்வேதம் என் கீதமே…..
2.கடல் மீது மழையானேன்
கானகத்தில் நிலவானேன் மீட்டாத
வீணையானேன் எழுதாத கவியானேன்
சுமக்க முடியா சோக சுமைகள்
விலக்கும் வழி என்னவென்று நான் தேடவே
சொன்னாலும் மாறாது சொல்லாமல் ஆறாது
பொல்லாத மாந்தர் செயல் மாறவே….
3. நிறமில்லா மலரானேன்
இனிப்பில்லா தேனானேன் அனலின்றி
தணலானேன் விழிகளின்றி இமையானேன்
புதுமை மனிதம் புதிய உலகம்
விடியும் என்று நின் பாதம் நான் பாடவே
விண்மீன்கள் விண் தூதர்
விண் பாடல்கள் பாட எந்நாளும்
நம் வாழ்வில் கொண்டாட்டமே