En Kanmalai En Kottaium

என் கன்மலை என் கோட்டையும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் கன்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே
என் வாழ்க்கையின் நம்பிக்கை
எல்லாம் நீரே
உம்மை ஆராதிப்பேன்
உம்மை ஆராதிப்பேன்
1.எரிகோவின் மதில்களை இடித்து
தடைகளை நீக்கி நடத்தி
உம் ஜனத்திற்கு நம்பிக்கை கொடுத்தீர்-என் கன்மலை
2.ஐந்தப்பம் இரண்டு மீனை கொண்டு
ஐயாயிரம் பேரை போஷித்து
உம் ஜனத்தின் தேவையை சந்தித்தீர்-என் கன்மலை
3.கானானிய ஸ்திரீன் மகளுக்காய்
அவள் வேண்டிக் கொண்டதைக் கேட்டு
விடுவித்து வாழவைத்தீர்-என் கன்மலை