en kankalootu nan utanpatikkai seykinren

என் கண்களோடு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் கண்களோடு நான் உடன்படிக்கை செய்கின்றேன்
என் செவிகளோடு நான் உடன்படிக்கை செய்கின்றேன் -2
நான் இனி தீமையை பார்ப்பதில்லை என்றேன்
நான் இனி தீமைக்கு செவி சாய்ப்பதில்லை என்றேன் -2
அர்ப்பணம் செய்கின்றேன்
கிருபை தாருமே -2
1 யார் உந்தன் கூடாரத்தில் தங்க கூடும்
யார் உமது பரிசுத்தப் பர்வதத்தில் ஏறக்கூடும் -2
உத்தமமாய் நடந்து
நீதியை நடப்பித்து
மனதார சத்தியத்தை பேசுபவனே – 2
உந்தன் சமூகமே
உந்தன் பிரசன்னமே
உந்தன் மகிமையை வாஞ்சிக்கிறேன் – அர்ப்பணம்
2 தேவ பயம் என் சிந்தனை ஆளட்டும்
தெய்வீக பிரசன்னம் என்றும் நான் உணரட்டும் -2
உம் கிருபை இல்லாமல்
என்னில் ஜீவன் இல்லையே
உம் தயவு இல்லாமல்
என்னில் மேன்மை இல்லையே -2
என்னை நேசித்தீரே
என்னை இரட்சித்தீரே
எனக்காகவே சிலுவை சுமந்தீரே – அர்ப்பணம்